என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கேரளா ஐகோர்ட்
நீங்கள் தேடியது "கேரளா ஐகோர்ட்"
கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் கைதான பிஷப் பிராங்கோ முல்லக்கல்லுக்கு கேரள ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. #FrancoMulakkal #KeralaHC
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள அருட் கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் தன்னை பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக பணியாற்றிய பிராங்கோ முல்லக்கல் கற்பழித்துவிட்டதாக பரபரப்பு புகார் கூறினார்.
இந்த புகாரை பிராங்கோ முல்லக்கல் மறுத்தார். அதே சமயம் அவரை கேரளாவுக்கு வரவழைத்து தனிப்படை போலீசார் விசாணை நடத்தினார்கள். பல நாட்கள் தொடர்ந்த விசாரணையின் முடிவில் அவரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பிராங்கோ முல்லக்கல் தற்போது கோட்டயத்தில் உள்ள பாலா ஜெயிலில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் கேரள ஐகோர்ட்டில் தனக்கு ஜாமீன் வழங்க கேட்டு பிராங்கோ முல்லக்கல் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு, பிராங்கோ முல்லக்கல்லுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பிராங்கோ முல்லக்கல் கேரளாவுக்குள் நுழையக் கூடாது, அவர் தனது பாஸ்போர்ட்டை ஐகோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும், சாட்சியங்களை கலைக்கக் கூடாது, 2 வாரத்திற்கு ஒரு முறை விசாரணை அதிகாரிகள் முன்பு அவர் ஆஜராக வேண்டும் என்று கேரள ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது. #FrancoMulakkal #KeralaHC

சிலி நாட்டில் சிறார்களுக்கு எதிரான பாலியல் புகாரில் சிக்கிய இரு பிஷப்புகளின் பதவியை பறித்து போப் பிரான்சிஸ் இன்று உத்தரவிட்டுள்ளார். #PopeFrancis #Chileanbishops #bishopsdefrocked
வாட்டிகன் சிட்டி:
கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் பல பிஷப்புகளுக்கு எதிராக சமீபகாலமாக பாலியல் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இந்த புகார்கள் தொடர்பாக விசாரித்துவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை மதகுருவான போப் பிரான்சிஸ் அவ்வப்போது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அவ்வகையில், கேரள மாநிலத்தில் ஒரு கன்னியாஸ்திரியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக பிராங்கோ முல்லக்கல் என்பவரை ஜலந்தர் பிஷப் பதவியில் இருந்து நீக்கம் செய்து வாட்டிகன் அரண்மனை சமீபத்தில் உத்தரவிட்டது.
இதேபோல், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சிலி நாட்டில் உள்ள சில பிஷப்களும், சிறார்-சிறுமிகளிடம் தகாத வகையில் பாலுறவு வைத்துகொண்டதாக புகார்கள் எழும்பின.
இதுதொடர்பாக, விசாரணை நடத்திய போப் பிரான்சிஸ் பெர்னான்டோ கரோடிமா(88) என்பவரை கடந்த மாதம் பிஷப் பதவியில் இருந்து நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மற்ற சம்பவங்கள் தொடர்பால தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் சிலி நாட்டில் உள்ள லா செரெனா நகர ஆர்ச்பிஷப் பிரான்சிஸ்க்கோ ஜோஸ் கோக்ஸ் ஹுனீயூஸ் மற்றும் இக்குவிகியூ நகர ஆர்ச்பிஷப் மார்க்கோ அன்ட்டோனியோ பெர்னான்டஸ் ஆகியோரை போப் பதவி நீக்கம் செய்துள்ளதாக வாட்டிகன் அரண்மனை இன்று வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.
வாட்டிகன் அரண்மனையின் சட்டங்களின்படி, போப்பின் இந்த முடிவு உறுதியானது, இறுதியானது. இதை எதிர்த்து யாரும் முறையீடு செய்ய முடியாது எனவும் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PopeFrancis #Chileanbishops #bishopsdefrocked
×

X